ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான இல்லத்தை பார்வையிட்ட குடியரசு துணைத் தலைவர் .!

இந்தியா

ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான இல்லத்தை பார்வையிட்ட குடியரசு துணைத் தலைவர் .!

ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான இல்லத்தை பார்வையிட்ட குடியரசு துணைத் தலைவர் .!

கோவாவில் பனாஜியில் இருந்து 40 கி.மீ தொலைவில் இருக்கும் போன்டாவில் உள்ள மாத்ருச்சாயா ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான இல்லத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தமது மனைவி உடன் பார்வையிட்டார்.

அவர்களது மகளும் சுவர்ண பாரத அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான தீபா வெங்கட் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

மாத்ருச்சாயா அறக்கட்டளை உறுப்பினர்களின் சேவைகளை பாராட்டிய குடியரசு துணைத் தலைவர், சேவையின் மூலமே ஒருவருக்கு திருப்தி கிடைக்கும் என்று கூறினார்.

சுவர்ண பாரத அறக்கட்டளையுடனான தமது உறவை குறித்து பேசிய அவர், அங்கிருக்கும் குழந்தைகளுடன் உரையாடும் போதெல்லாம் தனக்கு உத்வேகம் கிடைப்பதாகக் கூறினார். பெருநிறுவனங்கள் தங்களது பெருநிறுவன சமூகப் பொறுப்பின் கீழ் அரசு சாரா சேவை அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கொவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்கியதற்காக கொவிட் வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் தன்னலமில்லாத சேவையை குடியரசு துணைத் தலைவர் பாராட்டினார்.

Leave your comments here...