அமெரிக்க வெள்ளை மாளிகையில் தீபத்தை ஏற்றி வைத்த அதிபர் டிரம்ப், தீபாவளி வாழ்த்து.!

சமூக நலன்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் தீபத்தை ஏற்றி வைத்த அதிபர் டிரம்ப், தீபாவளி வாழ்த்து.!

அமெரிக்க வெள்ளை மாளிகையில் தீபத்தை ஏற்றி வைத்த அதிபர் டிரம்ப், தீபாவளி வாழ்த்து.!

பாரக் ஒபாமா அதிபரான காலத்தில் இருந்து வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் தீபத்தை ஏற்றி வைத்த அதிபர் டிரம்ப், தீபாவளியை அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய மக்கள் தீபாவளி கொண்டாடும் காலம் மிகவும் புனிதமான காலம் என்று இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள், பௌத்தர்கள் அமெரிக்காவிலும் உலகின் பல நாடுகளிலும் வசிக்கிறார்கள். அவர்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட டிரம்ப். இருளை ஒளி வெல்ல வேண்டும் என்றும் தீமையையும் நன்மை வெல்ல வேண்டும் என்றும் அறியாமையை ஞானம் வெல்ல வேண்டும் என்றும் வாழ்த்தினார். இந்த புனித காலத்தில் மக்கள் வீடுகளில் தீபத்தை ஏற்றி வைத்து உறவினர்கள், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று கூறிய டிரம்ப் அனைத்துத் தரப்பு மக்களின் சமய நம்பிக்கைகளை மதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

Comments are closed.