இராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி.!
- October 27, 2019
- jananesan
- : 1023
பிரதமர் மோடி இன்று காஷ்மீர் எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்களுடன் அந்த ஆண்டுகளிலும் அவர் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார். நாட்டைக் காக்கும் பணியில் குடும்பத்தினரை விட்டு பலநூறு கிலோமீட்டர் தூரத்தில் நாட்டின் எல்லையில் பணிபுரியும் வீரர்களுக்கு உற்சாகம் அளிப்பதற்காக தீபாவளியை வீரர்களுடன் கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார்.
Picture : Celebrated #Diwali with the brave soldiers of the Indian Army in Rajouri, Jammu and Kashmir.
காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர் பிரதமர் மோடி முதன்முறையாக காஷ்மீருக்கு செல்வது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். நாட்டை காப்பதற்காக உற்றார், உறவினர் மற்றும் குடும்பத்தினரை விட்டு எல்லையில் பணியாற்றும்p வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவரின் செயல் அமைகிறது.