புலம்பெயர் குழந்தைகள் கல்வியை தொடர்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கிய மத்திய கல்வி அமைச்சகம்

இந்தியா

புலம்பெயர் குழந்தைகள் கல்வியை தொடர்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கிய மத்திய கல்வி அமைச்சகம்

புலம்பெயர் குழந்தைகள் கல்வியை தொடர்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கிய மத்திய கல்வி அமைச்சகம்

புலம்பெயர் குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களின் கல்வியை தொடர்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது மத்திய கல்வி அமைச்சகம் வழங்கியுள்ளது

கொரோனா தொற்றால், பள்ளிகளை விட்டு வெளியேறிய குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை குறைக்கும் வகையில், மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்கள் முறையான திட்டம் வகுக்க வேண்டியது அவசியம் என உணரப்பட்டது. இதற்காக மத்திய கல்வி அமைச்சகம், பள்ளி படிப்பை கைவிட்ட குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களை பள்ளியில் சேர்த்து, படிப்பை தொடர வைக்கவும், பள்ளிகள் மூடியிருக்கும் போதும், திறந்த பின்பும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் எடுக்க வேண்டிய வழிகாட்டுதல்களை தயாரித்து வழங்கியுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களின் முக்கிய அம்சங்கள்:

1. பள்ளி படிப்பை கைவிட்ட குழந்தைகள் மற்றும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டிய குழந்தைகள்.

* தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட பள்ளி படிப்பை கைவிட்ட குழந்தைகளுக்கு பயிற்சியை தொடர்வது.

* சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டிய குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள்/ சிறப்பு ஆசிரியர்கள் மூலம் வீட்டு கல்வியை தொடர்வது.

2. பள்ளி படிப்பை கைவிட்ட குழந்தைகளை அடையாளம் காணுதல்

* மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்கள் வீடு வீடாக கணக்கெடுத்து 6 முதல் 18 வயதுடையை பள்ளி படிப்பை கைவிட்ட குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களை பள்ளியில் சேர்க்கும் செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

3. பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

* கல்வி ஆண்டு தொடக்கத்தில், பள்ளிக்கு செல்வோம், பள்ளிக்கு செல்லும் விழா போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பள்ளிகளில் சேர்க்கும் நடவடிக்கையை தொடங்கலாம்.

* குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

4. பள்ளி மூடியிருக்கும் போது மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய உதவிகள்

* பள்ளி படிப்பை கைவிட்ட குழந்தைகளின் வீட்டுக்கு சென்று ஆலோசனை வழங்க வேண்டும்.

* மனோ தர்பன் இணையதளம் மற்றும் உதவி எண்கள் மூலம் ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

* வீட்டில் இருந்தபடி கல்வி கற்பதற்கான பொருட்களை வழங்க வேண்டும்.

* நடமாடும் பள்ளிக் கூடங்களுக்கான சாத்தியங்களை ஆராய வேண்டும்.

* டி.வி/ரேடியோ மற்றும் டிஜிட்டல் வழியில் குழந்தைகள் கல்வி கற்பதற்கான வசதிகளை அதிகரிக்க வேண்டும்.

5. பள்ளி திறக்கும்போது மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய உதவி

* பள்ளிக்கு செல்லும் வகையில் மாணவர்களை தயார்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் திட்டங்களை செய்ய வேண்டும். அப்போதுதான் பள்ளி சூழலுக்கு அவர்கள் மாறி படிப்பை தொடரமுடியும்.

* பள்ளிப் படிப்பை கைவிடுவதை தவிர்க்க, தோல்வி விதிமுறைகளை இந்தாண்டு தளர்த்த வேண்டும்.

* கல்வி இழப்பை குறைக்கும் வகையில், தீர்வு திட்டங்களை மிகப் பெரிய அளவில் மேற்கொள்ள வேண்டும்.

6. ஆசிரியர் திறன் மேம்பாடு

* ஆன்லைன் மூலமான நிஸ்தா பயிற்சி மாதிரிகளை நன்கு பயன்படுத்த வேண்டும். கொவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கான பயிற்சிகளை திக்‌ஷா இணையதளத்தில் விரைவில் தொடங்க வேண்டும்.

* கல்வி கற்பதில், மாணவர்களை மகிழ்ச்சியுடன் ஈடுபடுத்த, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி +கவுன்சில் தயாரித்த மாற்று கல்வி அட்டவணையை பின்பற்ற வேண்டும்.

Leave your comments here...