சென்னை விமான நிலைய சுங்கத் துறையால் ரூ 1.04 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல், ஒருவர் கைது.!

தமிழகம்

சென்னை விமான நிலைய சுங்கத் துறையால் ரூ 1.04 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல், ஒருவர் கைது.!

சென்னை விமான நிலைய சுங்கத் துறையால் ரூ 1.04 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல், ஒருவர் கைது.!

துபாய் செல்லவிருந்த இண்டிகோ விமானம் 6ஈ 65 மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாட்டு பணம் கடத்தப்படவிருப்பதாக கிடைத்த உளவு தகவலையடுத்து, விமான நிலைய உளவு அதிகாரிகள் புறப்பாடு முனையத்தில் கடும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, சென்னையை சேர்ந்த மன்சூர் அலி கான், 27, யாகாலிக், 68, தமீம் அன்சாரி, 49, முகமது ஹுசைன், 30 மற்றும் யூசுப், 67, ஆகியோரும், புதூரை சேர்ந்த அப்துல் ரஹ்மான், 38, என்பவரும் பாதுகாப்பு சோதனை பகுதியை நோக்கி செல்லும் வழியில் இடைமறிக்கப்பட்டனர். அவர்களது உடைமைகளை பரிசோதனை செய்து பார்த்த போது, அவற்றில் வழக்கத்திற்கு மாறான எடையுடன் கூடிய ‘பவர் பேங்குகள்’ கண்டறியப்பட்டன.


அவற்றை உடைத்து பார்த்த போது, அவற்றில், ரூ 53.5 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், ரூ 28.3 லட்சம் மதிப்புடைய சவுதி ரியால், ரூ 22.2 லட்சம் மதிப்புடைய ஈயுரோக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டு, அந்நிய செலாவணி மேலாண்மை (பணத்தி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி), விதிகள், 2015-இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.

இவற்றின் மொத்த மதிப்பு ரூ 1.04 கோடி ஆகும். ரூ 20 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பிலான பணத்தை வைத்திருந்த தமீம் அன்சாரி கைது செய்யப்பட்டார்.இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது

Leave your comments here...