அண்ணாமலையார் கோயிலில் உத்திராயண புண்ணியகால உற்சவ கொடியேற்றம்..!

ஆன்மிகம்

அண்ணாமலையார் கோயிலில் உத்திராயண புண்ணியகால உற்சவ கொடியேற்றம்..!

அண்ணாமலையார் கோயிலில் உத்திராயண புண்ணியகால உற்சவ கொடியேற்றம்..!

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை இன்று 5.1.2021 செவ்வாய்கிழமை உத்ராயண புண்ணிய கால கொடியேற்றம். காலை 7.00 மணியளவில் சின்னநாயகர் பராசக்தி அம்மன் தீபாரதனைக்கு பின் கொடி மரம் முன் எழுந்தருள தங்க கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் கொடி ஏற்றினர்.

திருவண்ணாமலை தலத்தில் ஆண்டுதோறும் 4 உற்சவங்கள் நடை பெறுகின்றன . அதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது உத்தராயண புண்ணியகால பூஜை ஆகும் .இந்த விழா 10 நாட்கள் நடைபெறும் . மார்கழி மாதத்தின் கடைசி 9 நாட்களும் தை மாதத்தின் முதல் நாளும் இந்த 10 நாள் பூஜை இங்கு நடைபெறும் .

முதல் நாள் அண்ணாமலையார் , உண்ணாமலையம்மன் உற்சவர் , மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். அதன் பின் உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார் , விநாயகர் , பராசக்தி அம்மன் , சண்டிகேசுவரர் ஆகியோர் மேளதாளங்கள் முழங்க வருகை தந்து தங்ககொடி மரத்தின் அருகே எழுந்தருள்வார்கள் .

அதற்கு பிறகு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க உத்தராயண புண்ணியகால பிரமோற்சவ கொடியேற்றம் விழா நடைபெறும். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என்று கோஷம் எழுப்புவார்கள். உண்மையில் இந்த காட்சி கண்கொள்ளா காட்சி என்றே சொல்லலாம்.

உத்திர என்றால் வடமொழியில் வடக்கு என்று பொருள் . அயணம் என்றால் வழி என்று அர்த்தமாகும் . சூரிய பகவான் தென்திசையில் இருந்து வடதிசை நோக்கி பயணம் செல்லும் காலமே உத்திராயண புண்ணியகாலம் என்று அழைக்கப்படுகிறது. தை , மாசி , பங்குனி , சித்திரை , வைகாசி , ஆனி ஆகிய 6 மாதங்களும் உத்திராயண காலமாகும் .

Leave your comments here...