உலக தலைவர்களின் செல்வாக்கு குறித்து நடத்திய ஆய்வில் பிரதமர் மோடி முதலிடம்.!

உலகம்

உலக தலைவர்களின் செல்வாக்கு குறித்து நடத்திய ஆய்வில் பிரதமர் மோடி முதலிடம்.!

உலக தலைவர்களின் செல்வாக்கு குறித்து நடத்திய ஆய்வில் பிரதமர் மோடி முதலிடம்.!

அமெரிக்காவின் மார்னிங் கன்சல்ட் என்ற சர்வே நிறுவனம் கடந்த டிசம்பரில், உலகின் இந்தியா, ஆஸி., அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரசேில், கனடா, ஜெர்மனி, இத்தாலி, மெக்சிகோ, தென்கொரியா, ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களின் செல்வாக்கு குறித்த ஆய்வு ஒன்றினை நடத்தியது. ஆய்வு முடிவில் இந்திய பிரதமர் மோடி அதிக பட்சமாக 55 ரேட்டிங் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

மோடிக்கு அடுத்தபடியாக மெக்சிகோ அதிபர் லோபேஸ் ஒப்ரேடர் 29 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் மூன்றாம் இடத்தில் ஆஸி பிரதமர் ஸ்காட் மோரிசன் 27 புள்ளிகளுடன் உள்ளார். 24 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலா மெர்க்கல் உள்ளார்.

இத்தாலி பிரதமர் குலுசெப்பே கொன்டே 16 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மைனஸ் 18 புள்ளிகளுடன் 10 வது இடத்திலும், பிரான்ஸ் அதிபர் மைனஸ் 25 புள்ளிகளுடன் கடைசியாக 13வது இடத்திலும் உள்ளார்.


கொரோனா பரவல் காலத்தில் பிரதமர் மோடியின் சிறந்த நிர்வாகத் திறனால் அவருக்கு அதிக ரேட்டிங் கிடைத்ததாக கருதப்படுகிறது இந்நிறுவனம் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பகுதிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட அந்நாட்டு குடிமக்களிடம் 7 நாட்களாக சர்வே மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...