அன்று துப்புரவு பணிப்பெண்… இன்று பஞ்சாயத்து தலைவராக தேர்வு.!

அரசியல்

அன்று துப்புரவு பணிப்பெண்… இன்று பஞ்சாயத்து தலைவராக தேர்வு.!

அன்று துப்புரவு பணிப்பெண்… இன்று பஞ்சாயத்து தலைவராக தேர்வு.!

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்தனம்புரம் பஞ்சாயத்தில், ஆனந்தவள்ளி, 46, பகுதிநேர துப்புரவு பணியாளராக வேலை பார்த்தார். பட்டியலினத்தை சேர்ந்தவரான இவர், கடந்த 10 ஆண்டுகளாக இதே வேலையை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்ட ஆனந்தவள்ளி, பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 10 ஆண்டுகளாக பஞ்சாயத்து அலுவலகத்தில் தூசித்தட்டி, துப்புரவு வேலை செய்து அதே அலுவலகத்தில் தலைவர் நாற்காலியில் அமர்வார் என எதிர்பார்த்திருக்க மாட்டார். தலைவராக பொறுப்பேற்று நாற்காலியில் அமரும்போது, அவரால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‛நான் 2011ம் ஆண்டு பகுதி நேர துப்புரவாளராக பணியில் சேர்ந்தேன். ரூ.2000 சம்பளம் வாங்கிய நான் தற்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். எனக்கு ரூ. 6000 சம்பளம். எனது பழைய வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்.’ என்றார்.

Leave your comments here...