உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாலம் அமைப்பு இந்திய இராணுவத்தில் இணைப்பு.!

இந்தியா

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாலம் அமைப்பு இந்திய இராணுவத்தில் இணைப்பு.!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாலம் அமைப்பு இந்திய இராணுவத்தில் இணைப்பு.!

தற்சார்பு இலட்சியத்தை அடையும் நோக்கிலும், தனியார் துறை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து பணிபுரிந்தும், 10 மீட்டர் குறுகிய கால பாலங்கள் மூன்றை இந்திய ராணுவம் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

லார்சன் & டூப்ரோ லிமிடெட்டின் தலகான் மையத்தில் 2020 டிசம்பர் 29 அன்று இப்பாலங்கள் ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன. இராணுவச் செயல்பாடுகளின் போது, படைகளுக்கு விரைவான போக்குவரத்து வசதியை இந்தப் பாலங்கள் அளிக்கும்.


உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட இந்தப் பாலம், வெளிநாட்டு உபகரணங்களை நமது படைகள் சார்ந்திருப்பதைத் தவிர்ப்பதில் முக்கியமான ஒரு நடவடிக்கையாகும்.

அரசின் இந்த ‘மேக் இன் இந்தியா’ முன்னெடுப்பில் அனைத்துப் பங்குதாரர்களும் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். இந்திய ராணுவத்தின் பாதுகாப்புத் தேவைகளை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

Leave your comments here...