சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் ஆலோசனைக் கூட்டம்

ஆன்மிகம்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் ஆலோசனைக் கூட்டம்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் ஆலோசனைக் கூட்டம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது இக்கோவிலில் வைகாசி திருவிழா 17 நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் பக்தர்கள் கோரிக்கையை ஏற்று திருப்பணி வேலைகள் நடந்து கடந்த மார்ச் மாதம் மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடு செய்தனர்.

கொரோணா தொற்றுநோய் காரணமாக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது மகாகும்பாபிஷேகம் நிறுத்தி வைக்கப்பட்டது .தற்போது அரசு தளர்வு விதிக்கப்பட்டுள்ளதால் , மகா கும்பாபிஷேகம் ஏற்பாடு செய்ய கடந்த மாதம் கூட்டம் நடைபெற்று ஜனவரி 25 ஆம் தேதி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதன் பேரில், தமிழக அரசு அனுமதி பெற்று விழா நடத்துவதற்கான சட்ட திட்டங்களும் கொரானா காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் குறித்து இக்கோவிலின் அன்னதான மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு திருப்பணி கமிட்டித் தலைவர் பதஞ்சலி சுப்ரமணியன் செட்டியார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பால்பாண்டி முருகேசன் நாகராஜன் கொரியர் கணேசன் சின்னப்பாண்டி ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்து கொண்ட திருப்பணிக் கமிட்டி கௌரவத் தலைவர் மாணிக்கம் எம்எல்ஏ பேசியபோது, அரசு விதித்துள்ள சட்ட திட்டத்திற்கு உட்பட்டு அனைவரும் ஒற்றுமையாக மகா கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் அடுத்த கூட்டத்தில் திருப்பணி கமிட்டி குழுவினர் விடுபடாமல் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்ப வேண்டும் வருகிற ஜனவரி 5 ஆம் தேதி வரை ரூபாய் 10,000 செலுத்துவோர் திருப்பணி கமிட்டியில் சேர்த்துக் கொள்வார்கள் ரூபாய் 5000 செலுத்துபவர்களின் பெயர்கள் கல்வெட்டில் பொறிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இந்த அறிவிப்பினை கோவிலைச் சேர்ந்த கிராமங்களுக்கு அனைத்து தரப்பினருக்கும் தெரிவிக்க வேண்டும் குறுகிய நாட்கள் இருப்பதால் அனைவரும் முழுவீச்சில் செயல்பட வேண்டும் என்று பேசினார். முன்னதாக, செயல்அலுவலர் இளஞ்செழியன் வரவேற்றார் .கூட்ட முடிவில் ஆலய பணியாளர் பூபதி நன்றி கூறினார். இதில் ஆலய பணியாளர்கள் கவிதா வசந்த் சுபாஷினி திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் திருவிழா மண்டகப்படி உபயதாரர்கள் சமூக ஆர்வலர்கள் தண்டபாணி ராமசாமி கேபிள் மணி தியாகு சூர்யா மற்றும் கோவிலைச் சேர்ந்த காவல் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர் அர்ச்சகர் சண்முகம் சிறப்பு அர்ச்சனை செய்து பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.

Leave your comments here...