இந்தியாவில் உள்ள 8 கடற்கரைகளில் சர்வதேச நீலக்கொடி ஏற்றப்பட்டது.!

இந்தியா

இந்தியாவில் உள்ள 8 கடற்கரைகளில் சர்வதேச நீலக்கொடி ஏற்றப்பட்டது.!

இந்தியாவில் உள்ள 8 கடற்கரைகளில் சர்வதேச நீலக்கொடி ஏற்றப்பட்டது.!

நாட்டில் உள்ள எட்டு கடற்கரைகளில் சர்வதேச நீலக்கொடியை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் காணொலி மூலம் இன்று ஏற்றினார்.

33 கடுமையான விதிமுறைகளின் அடிப்படையில் டென்மார்க்கில் உள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான அமைப்பால் வழங்கப்படும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான முத்திரையே நீலக்கொடி சான்று ஆகும்.


ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் உள்ளிட்ட உறுப்பினர் நிறுவனங்களைச் சேர்ந்த சர்வதேச நீதிபதிகள் குழுவால் டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகனில் 2020 அக்டோபர் 6 அன்று இந்த கடற்கரைகளுக்கு சர்வதேச நீலக்கொடி சான்று வழங்கப்பட்டது.

குஜராத்தில் உள்ள சிவராஜ்பூர், டையூவில் உள்ள கோக்லா, கர்நாடகாவில் உள்ள காசர்கோட் மற்றும் பதுபித்ரி, கேரளாவை சேர்ந்த கப்பாட், ஆந்திராவின் ருஷிகொண்டா, ஒடிசா மாநிலத்தின் கோல்டன் பீச் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபரை சேர்ந்த ராதாநகர் கடற்கரை ஆகிய எட்டு கடற்கரைகள் இந்த நீலக்கொடி அங்கீகாரத்தை பெற்றுள்ளன.

Leave your comments here...