கொரியாவிற்கு 3 நாள் பயணம் மேற்கொண்டு ராணுவத் தளபதி ஜெனரல் நரவானே.!

இந்தியா

கொரியாவிற்கு 3 நாள் பயணம் மேற்கொண்டு ராணுவத் தளபதி ஜெனரல் நரவானே.!

கொரியாவிற்கு 3 நாள் பயணம்  மேற்கொண்டு  ராணுவத் தளபதி ஜெனரல் நரவானே.!

ராணுவ தளபதி ஜெனரல் நரவானே , கொரியாவிற்கு தனது 3 நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்.

28 முதல் 30-ஆம் தேதி வரையிலான இந்த பயணத்தின்போது கொரியாவின் உயர் ராணுவ அதிகாரிகள் மற்றும் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசுவார்.சியோலில் உள்ள போர் நினைவுச் சின்னம் மற்றும் தேசிய கல்லறையில் மலர் வளையம் வைத்து ஜெனரல் நரவானே மரியாதை செலுத்துவார்.

கொரியா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர், ராணுவத் தலைவர், பாதுகாப்புப் படைகளின் கூடடுத் தலைமையகத்தின் தலைவர் மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் நிர்வாக அமைச்சர் உள்ளிட்டோருடன் பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளின் உறவை மேம்படுத்தும் வகையில் அவர் ஆலோசனை நடத்துவார்.

Leave your comments here...