அவசர கால ஊர்தி கூட செல்ல பாதையில்லாத சுங்கச்சாவடி..! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்.? சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நடவடிக்கை எடுக்க கோரிக்கை.!

சமூக நலன்

அவசர கால ஊர்தி கூட செல்ல பாதையில்லாத சுங்கச்சாவடி..! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்.? சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நடவடிக்கை எடுக்க கோரிக்கை.!

அவசர கால ஊர்தி கூட செல்ல பாதையில்லாத  சுங்கச்சாவடி..! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்.? சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நடவடிக்கை எடுக்க கோரிக்கை.!

மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்க சாவடி இருந்து தென் மாவட்டங் களான விருதுநகர் சிவகாசி கன்னியாகுமரி திருவனந்தபுரம் ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் சொல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் இந்த சுங்க சாவடியை கடந்து தான் செல்ல வேண்டும்.

இந்த சுங்க சாவடியில் தினசரி பிரச்சனைகள் மறியல்கள் போராட்டங்கள் வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது உள்ளூர் மக்களை கட்டணம் செலுத்தி செல்ல வலியுறுத்துவதும் மீறும் பட்சத்தில் குண்டர்களை வைத்து மிரட்டுவதும் பின் மறியல் நடப்பதும் அன்றாட வாடிக்கையாகவே உள்ளது முக்கியமான குற்றச்சாட்டு சமூக ஆர்வலர்கள் வைக்கப்பட்டுள்ளது நகரப் பேருந்துகள் செல்வதற்கு மற்றும் அவசரகால ஊர்திகள் செல்வதற்கான பாதைகள் அமைக்கப்படவில்லை எனவும் வாகனங்கள் வரிசையில் நிற்கும் போது அவசரகால ஊர்திகள் வரும்பொழுது வாகனங்கள் செல்ல கூடிய வழியிலேயே அவசரகால ஊர்திகளும் நின்று செல்ல வேண்டிய அவலநிலை இரு பகுதியிலும் இதனை தேசிய நெடுஞ்சாலைதுறை ஆணையத்திடம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை சொல்லியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சுங்கச்சாவடி ஆதரவாகவே தேசிய நெடுஞ்சாலைதுறை செயல்படுகிறது என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

ஒவ்வொரு சுங்கச்சாவடியில் கட்டாயமாக அவசர கால ஊர்தி செல்வதற்கு தனி பாதை இருக்கவேண்டும் ஆனால், கப்பலூர் சுங்கச் சாவடியில் அதுபோன்ற பாதை இல்லாததால் , தினசரி தென்மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய அவசர கால ஊர்தி 10 லிருந்து 15 நிமிடம் நின்று செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், உயிரிழப்பும் நிகழ்வதாகும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமூக ஆர்வலர்களின் கோரிக்கையானது:- சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக. முன் வந்து சுங்க சாவடியில் அவசரகால ஊர்திகள் செல்வதற்கு பாதை அமைக்கும் வரை கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் எனவும், மேலும், உள்ளூர் பொதுமக்களை கட்டணமின்றி செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் அதுவரை கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave your comments here...