காவல் நிலையங்களுக்கு பெண் காவலர்கள் வரவேற்பாளர்களாக நியமனம்.!

சமூக நலன்தமிழகம்

காவல் நிலையங்களுக்கு பெண் காவலர்கள் வரவேற்பாளர்களாக நியமனம்.!

காவல் நிலையங்களுக்கு பெண் காவலர்கள் வரவேற்பாளர்களாக நியமனம்.!

மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர் என்று ஒரு காவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.பெண் காவலர்களே இப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினசரி காலை 09.00 மணிமுதல் 20.00 மணிவரை அலுவலில் இருப்பார்கள். இவர்கள் காவல் நிலையத்திற்கு வரக்கூடிய மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை கனிவோடு வரவேற்று வருகைக்கான காரணத்தை தெரிந்து கொண்டு காவல் நிலையத்தில் உள்ள உயர் அதிகாரிகளிடம் அழைத்து செல்வர்.வரவேற்பாளர்களுக்கு வேறுபணி வழங்கப்படாமல் வரவேற்பாளராக மட்டும் பணிபுரிவர்.

இந்த வரவேற்பாளர்களை காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் எளிதில் அடையாளம் காண்பதற்காக அவர்களுக்கு வில்லை பாட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு காவலர்கள் சட்டம் & ஒழுங்கு குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆகிய அனைத்திற்கும் பொதுவான அலுவலராக செயல்படுவார்கள். பொதுமக்கள் அமர்வதற்காக போதுமான இருக்கை வசதிகள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செய்யப்பட்டுள்ளது. எழுத படிக்க தெரியாதவர்களுக்கு புகார் மனுவை எழுதிக்கொடுப்பார்கள். காணாமல் போன ஆவணங்கள் காணமல் போன ஆவணங்கள் தொடர்பான புகாரினை சிசிடிஎன்எஸ் வலைதளத்தில் எவ்வாறு பொது மக்கள் பதிவு செய்யவேண்டும் என்பது பற்றியும், இதற்கு காவல்துறையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ள இவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

எனவே வரவேற்பு காவலர்களின் பணியை காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மதுரை மாநகர காவல்துறை சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...