சாலையை சீரமைக்க கோரிக்கை – வாழைக்கன்றுகளை நட்டு வைத்து நூதன போராட்டம்.!

அரசியல்தமிழகம்

சாலையை சீரமைக்க கோரிக்கை – வாழைக்கன்றுகளை நட்டு வைத்து நூதன போராட்டம்.!

சாலையை சீரமைக்க கோரிக்கை – வாழைக்கன்றுகளை நட்டு வைத்து நூதன போராட்டம்.!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி பகுதிகளில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக பல இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டது. பணிகள் முடிவடைந்து பல மாதங்களாகியும் இன்னும் சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன.

இதனால் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி, சிரமம் அடைந்து வருகின்றனர். ராஜபாளையம் நீதிமன்ற அருகில் உள்ள, மாடசாமி கோவில் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இந்தப்பகுதியில் விபத்துகளும் பெருமளவில் நடந்து வருகிறது.

இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர், சகதியாக கிடக்கும் சாலையில் வாழைக்கன்றுகளை நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலைகளை கண்டு கொள்ளாத அதிகாரிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave your comments here...