குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்.!

சமூக நலன்

குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்.!

குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்.!

மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான மாடக்குளம் கிராமத்தில் குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறுவதையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பு கருதி காவல் துறையினர் கண்காணிப்பு கேமராவை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை பொன்மேனி, அம்பேத்கர் சிலை, அரசு மாணவர் விடுதி, மாடக்குளம் மெயின் ரோடு, போடி ரயில்வே லைன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முக்கிய இடங்களில் முதல் கட்டமாக 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மதுரை மாநகர் காவல்துறை ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின்பேரில், மதுரை எஸ் எஸ் காலனி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பிளவர்சீலா மேற்பார்வையில் இந்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கண்காணிப்பு கேமரா பொருத்த படுவதால், குற்றங்கள் குறையும் எனவும் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண முடியும் என்பதால் மதுரைமா நகரின் முக்கிய வீதிகளில் ஏற்கனவே காவல் துறையின் சார்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...