கிரிக்கெட் சங்கத்தில் நடந்த நிதி மோசடி – பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கியது அமலாக்கத் துறை.!

இந்தியா

ஜம்மு – காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில், பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக எழுந்த புகாரில் கடந்த 2018-ல் தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவிடம், அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. விசாரணையில் கிரிக்கெட் சங்கத்தில், 2002 – 2011 ஆண்டுகளில் ரூ. 43.69 கோடி முறைகேடு நடந்தது தெரியவந்தது.

கிரிக்கெட் சங்க உறுப்பினராக இருந்த பரூக் அப்துல்லா உள்ளிட்ட 6 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. வழக்கை அமலாக்கத்துறையும் விசாரித்து வந்தது.

இந்த நிலையில், பரூக் அப்துல்லா உள்ளிட்டவர்களின் ரூ.11.86 கோடி மதிப்பிலான சொத்துக்களை மத்திய அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இந்த சொத்துக்கள் ஜம்முவிலும், ஸ்ரீநகரிலும் உள்ளன. 2 குடியிருப்பு கட்டிடங்கள், ஒரு வணிக கட்டிடம், 3 மனைகள் முடக்கப்பட்டுள்ள சொத்துக்கள் ஆகும்.இந்த சொத்துக்களின் வழிகாட்டு மதிப்பு ரூ.11.86 கோடி என்றாலும், அவற்றின் சந்தை மதிப்பு ரூ..60 கோடி முதல் ரூ.70 கோடி வரையில் இருக்கும் என்று மத்திய அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave your comments here...