தேசிய வரைவு ரயில் திட்டத்தை இந்திய ரயில்வே வெளியிட்டது.!

இந்தியா

தேசிய வரைவு ரயில் திட்டத்தை இந்திய ரயில்வே வெளியிட்டது.!

தேசிய வரைவு ரயில் திட்டத்தை இந்திய ரயில்வே வெளியிட்டது.!

எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கப் போகும் தேசிய வரைவு ரயில் திட்டத்தை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.

திறன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பூர்த்தி செய்யப்படாதவற்றை நிறைவு செய்யும் நோக்கிலும், நாட்டின் ஒட்டுமொத்த சரக்குப் போக்குவரத்து சூழலியலில் தனது பங்கை அதிகரிக்கும் விதத்திலும் தேசிய வரைவு ரயில் திட்டத்தை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.

உள்கட்டமைப்புத் திறனை அதிகப்படுத்தி, ரயில்வே சேவைகள் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும். 2030-ஆம் ஆண்டுக்குள் தேவையை விட அதிகமாக திறனை ஏற்படுத்தி, 2050-ஆம் ஆண்டு வரை அதை நிலைத்திருக்க செய்வதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

முக்கியமான சில திட்டங்களை 2024-ஆம் ஆண்டுக்குள் முடிப்பதற்காக ‘விஷன் 2024’ தேசிய வரைவு ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு செயல்படுத்தப்படவுள்ள ரயில் தடம் மற்றும் சிக்னல் திட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கான தெளிவான காலகெடுக்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கிழக்குக் கடற்கரை, கிழக்கு-மேற்கு மற்றும் வடக்கு-கிழக்கு என்று மூன்று பிரத்தியேக சரக்கு வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பல்வேறு அதிவேக ரயில் தடங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

Leave your comments here...