மக்களிடம் இருந்து திரட்டப்படும் நன்கொடையை கொண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் – ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை

இந்தியா

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளை கவனிப்பதற்காக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.

அயோத்தியில் பிரமாண்டமாய் அமையும் ராமர் கோவில் நாட்டு மக்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடை மூலம் தான் கட்டப்படும். இதற்காக ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா, நிதி பங்களிப்பு பிரசாரத்தை நாடு முழுவதும் மேற்கொள்ள உள்ளது. மக்கள் தாங்களாக முன்வந்து வழங்கும் நன்கொடைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

இதன் பொது செயலர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக நாட்டு மக்களிடம் நிதி திரட்டும் மாபெரும் பிரசார இயக்க பணியினை தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நாடு முழுவதும் துவங்க உள்ளது. மக்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடையில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காக 10, 100 மற்றும் 1,000 ரூபாய்க்கான கூப்பன்கள் வழங்கப்படும். இதற்காக 10 ரூபாய்க்கான கூப்பன்கள் 4 கோடியும், 100 ரூபாய்க்கான கூப்பன்கள் 8 கோடியும், ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன்கள் 12 லட்சமும் அச்சிடப்பட்டு உள்ளன.

இந்த நிதி பங்களிப்பு பிரசாரத்தின் போது, அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் மாதிரி புகைப்படம் மக்களுக்கு வழங்கப்படும்.ராமர் கோவில் கட்டுமானத்துக்கு வெளிநாடுகளில் இருந்து எந்த நிதியும் பெற முடியாது. ஏனெனில் அதற்கான எந்த ஒப்புதலையும் அறக்கட்டளை பெறவில்லை’ இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...