ஸ்ரீஆண்டாள் திருப்பாவை பட்டு புடவையில், பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.!

ஆன்மிகம்

ஸ்ரீஆண்டாள் திருப்பாவை பட்டு புடவையில், பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.!

ஸ்ரீஆண்டாள் திருப்பாவை பட்டு புடவையில், பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.!

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. 108 திவ்ய தேசங்களில் மிகவும் புகழ் பெற்றது ஸ்ரீஆண்டாள் அவதரித்த இந்த திருக்கோவில். தினந்தோறும் திருவிழாக் கோலம் காணும் ஆண்டாள் கோவிலில், மார்கழி மாதம் 30 நாட்களும் வெகு சிறப்பாக பூஜைகள் நடைபெறும்.

மார்கழி மாதம் விரதம் இருந்து, திருப்பாவை பாடல்கள் பாடி பக்தர்கள், பெண்கள் ஸ்ரீஆண்டாளை தரிசனம் செய்து மகிழ்வார்கள். 30 நாட்களும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீஆண்டாள் – ரங்கமன்னார் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீஆண்டாளுக்கு திருப்பாவை பாடல்கள் பொறித்த, தங்க இழை கொண்டு சிறப்பாக நெய்யப்பட்ட பட்டுப்புடவை சார்த்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் ராஜா பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். திருப்பாவை பட்டுச் சேலையில் காட்சி கொடுத்த ஸ்ரீஆண்டாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோவில் அலுவலர்கள், திருக்கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave your comments here...