சென்னை விமான நிலையத்தில், 2.4 கிலோ தங்கம், ரூ.12 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்: ஒருவர் கைது.!

தமிழகம்

சென்னை விமான நிலையத்தில், 2.4 கிலோ தங்கம், ரூ.12 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்: ஒருவர் கைது.!

சென்னை விமான நிலையத்தில், 2.4 கிலோ தங்கம், ரூ.12 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்: ஒருவர் கைது.!

சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறையின் நடத்திய பரிசோதனயில், 2.4 கிலோ தங்கம், ரூ.12 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

துபாயில் இருந்து சென்னை வரும் ஐஎக்ஸ்-1644 விமானத்தில், பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னையைச் சேர்ந்த அஸ்கர் அலி, ஷரிம்பவ்லத், ஷேக் அப்துல்லா ஆகியோரின் கைப் பைகளை சோதனை செய்த போது, அவற்றில் 6 தங்க சங்கிலிகள் 450 கிராம் எடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது பறிமுதல் செய்யப்பட்டது.காதர் உசேன், முகமது இப்ராகிம் ஆகியோரின் உடமைகளை சோதனை செய்தபோது, அவர்களின் செல்போன் உறைகளில் இருந்து 2 தங்க சங்கிலிகளும், பைகளில் இருந்து 2 தங்க சங்கிலிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையைச் சேர்ந்த நதீம் கான் என்பவரின் உடமைகளை பரிசோதித்த போது, அட்டை பெட்டியில் 2 தங்க தகடுகள், கைப் பையில் 2 தங்க சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருச்சியைச் சேர்ந்த யாகூப் என்ற பயணி கொண்டுவந்த பெட்டியை பரிசோதித்த போது, அதன் அடியில் 5 தங்க காசுகள் மறைத்து வைக்கபட்டது கண்டுபிடிக்கப்பட்டன. 12 தங்க சங்கிலிகள், 5 தங்க காசுகள், 2 தங்க தகடுகள், ஆகியவற்றின் மொத்த எடை 1.10 கிலோ. இவற்றின் மதிப்பு ரூ.56 லட்சம்.


பிளை துபாய் விமானத்தில் வந்த திருச்சியைச் சேர்ந்த 8 பயணிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 17 தங்க துண்டுகள், 10 தங்க சங்கிலிகள், 2 தங்க தகடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த எடை 1.32 கிலோ. இவற்றின் மதிப்பு ரூ.67 லட்சம்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சவுகத் அலி என்ற பயணி ஏர் இந்தியா விமானம் மூலம், துபாய் செல்ல இருந்தார். அவரிடம் நடத்திய சோதனையில், 19,500 சவுதி ரியால்கள், 11,000 அமெரிக்க டாலர்கள் என மொத்த ரூ.12 லட்சம் மதிப்பில் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் ஏற்கனவே இது போன்ற குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால், அவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 2.4 கிலோ. இவற்றின் மதிப்பு 1.23 கோடி என சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...