வேல் யாத்திரை நிறைவு விழா : நரிக்குறவ பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து சீர்வரிசை வழங்கிய பாஜக.!

அரசியல்சமூக நலன்

வேல் யாத்திரை நிறைவு விழா : நரிக்குறவ பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து சீர்வரிசை வழங்கிய பாஜக.!

வேல் யாத்திரை நிறைவு விழா : நரிக்குறவ பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து சீர்வரிசை வழங்கிய பாஜக.!

பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில தலைவர் எல்.முருகன் அவர்கள் கடந்த நவம்பர் மாதம் ஆறாம் தேதி வேல் யாத்திரையை தொடங்கி டிசம்பர் மாதம் 7ஆம் தேதி திருச்செந்தூரில் யாத்திரையை நிறைவு செய்தார்.

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்து வள்ளி தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்வதை நினைவு கூறும் வகையில் வேல் யாத்திரைக்கான வெற்றி விழாவாக ஏழை நரிக்குறவ பெண்களுக்கு திருமணம் செய்துவைத்து சீர்வரிசை வழங்கப்பட்ட திருமண நிகழ்வு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சாத்தாவுராயன் கோவிலில் நடந்துள்ளது.மாநில பாஜக விவசாய அணி துணைத் தலைவர் முத்துராமன் தலைமையில் இந்த திருமண நிகழ்ச்சி நடந்துள்ளது.

தொடர்ந்து ஒவ்வொரு அமாவாசை அன்றும் ஒரு நிகழ்வை பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் முன்னோட்டமாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று இந்த மாதமும் உசிலம்பட்டியில் நடந்துள்ளது. பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் அவர்கள் கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் முழுவதிலும் உள்ள ஆறுபடை வீடுகளில் வேல் யாத்திரையாக சென்று திருச்செந்தூரில் அந்த யாத்திரையை நிறைவு செய்ததைநினைவு கூறும் வகையில் இந்த திருமணத்தை நடத்தி உள்ளதாகவும் முருகக்கடவுள் குறவர் பெண்ணை திருமணம் செய்துள்ளதும் புராணத்தில் இடம் பெற்றுள்ளது.

அதேபோன்று அத்தகைய மரபுப்படி நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு தேவையான சீர்வரிசை பொருள்களை சுஜாதாமுத்துராமன் வழங்கினார். தொடர்ந்து பாஜக சார்பில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நிகழ்வாக செய்து உசிலம்பட்டி தொகுதி மக்களின் கவனத்தை மட்டுமல்லாது தமிழக மக்களின் கவனத்தை தேர்தல் நேரத்தில் கவனத்தை ஈற்கும் வகையில்பாஜக சார்பில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், தற்பொழுது நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு குடிமைப் பொருள்கள் எரிவாயு இணைப்பு திருமணம், கல்வி உதவித்தொகை முதியோர் மற்றும் விதவைஉதவித் தொகை ஆகியவை கிடைப்பதில்லை. நிரந்தர முகவரி இல்லாத காரணத்தினால் கல்வி வேலைவாய்ப்பில் நரிக்குறவ இன மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடைப்பதில்லை எனவும் நிரந்தரமாக ஒரே இடத்தில் 3- ஆண்டுகளுக்கும் மேல் குடியிருக்கும் இந்த சமுதாய மக்களுக்கு ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு உடனடியாக குடும்ப அட்டை எரிவாயு இணைப்பு உள்ளிட்டவற்றை வழங்குவதற்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் கோரி பலமுறை மாவட்ட நிர்வாகம் வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்டவற்றில் மனு கொடுத்தும் அதற்கு உரிய பதில் இல்லை என்றும் தெரிவித்தனர். உசிலம்பட்டி சமத்துவபுரத்தில் நரிக்குறவ இன மக்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் நிலையிலும் அவர்களுக்கு எந்தவிதமான அத்தியாவசிய தேவைகளும் உதவிகளும் கிடைக்கவில்லை என்றும் கூறினர். இந்த நிகழ்ச்சியில் , ஓம்சக்தி குங்குமம்சித்த நிறுவனர்தலைவர் சித்தர்கள் மரபு வழி மார்க்கம் மக்கள் பேரவை ஆகவே இரத்தின மாணிக்கம் உலக சித்தர் ஞானபீடம் நிர்வாண ஸ்ரீ ராஜா சுவாமிகள் மற்றும் உசிலம்பட்டி நகர பாஜக தலைவர் பாண்டியராஜன். மாவட்ட பொருளாளர் நல்ல மலை.விவசாய அணி செயலாளர் கலைச்செல்வன் நகர் விவசாய அணி தலைவர் முருகன் செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் பன்னீர் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave your comments here...