நிலவொளி டிரஸ்ட் டிரஸ்ட் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்…!

சமூக நலன்

நிலவொளி டிரஸ்ட் டிரஸ்ட் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்…!

நிலவொளி டிரஸ்ட் டிரஸ்ட் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்…!

சென்னையில் நிலவொளி டிரஸ்ட் ஜெனரல் சார்பில் நலிவுற்ற ஏழை எளியவர்களுக்கு இலவசமாக பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த அமைப்பின் தலைவர் புனிதவள்ளி தலைமை தாங்கினார் கவிஞர் முத்துராமன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஹிந்து பார்வை ஆசிரியர் பிரேம்சாகர் பள்ளி மாணவர்களுக்கான அறிவுத்திறன் குறித்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தினார்.

முன்னதாக மங்கள வாத்திய நிகழ்சியுடன் தெ௱டங்கிய இந்த விழாவில் காவல் துறை உதவி ஆணையாளர்கள் ஃபிராங்க் டி ரூபன், பி.ராஜசேகர் , சமூக ஆர்வலர் எம்.எஸ் .நித்தியானந்தம் , பத்திரிகையாளரும், தூய்மை பாரதம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வி.எஸ். இராமன், ஸ்ரீ சாய் இல்லத்தின் இயக்குநர் கே.ஜெயலட்சுமி, சட்டபோராளி ரவி, ஆகியோர்கள் நிலவொளி டிரஸ்ட்ன் சமூக பணிகளும் அதன் மூலம் பயன் பெறும் பயனாளிகள் குறித்தும் அமைப்பின் தலைவர் புனிதவள்ளி அவர்களின் சமூக பாணிகள் குறித்து பாராட்டி பேசினார்கள்.

இந்த நலத்திட்ட உதவிகளில் தையல் இயந்திரம் , பள்ளிமாணவர்களுக்கான நோட்டு, பேனா, பென்சில்கள், அன்னதானம் , போன்ற பல்வேறு உதவி திட்டங்களும் வழங்கபட்டன . மேலும் நலிவடைந்த நாதஸ்வர கலைஞர்களுக்கு உதவி தெ௱கையும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தொழில் அதிபர்கள் எஸ்.கே. மணி, ரவிசந்திரன், ஊடக உரிமை குரல், தமிழன் வடிவேல், கொளத்தூர் நண்பன், பொருளாளர் எல்.கே. மூர்த்தி, செயலாளர் என்.ராஜேஷ், உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கெ௱ண்டவர்களுக்கு நிலவொளி டிரஸ்டின் தலைவர் புனிதவள்ளி அவர்களின் திருக்கரத்தால் பொன்னாடை போர்த்தி ,நினைவு கேடயம் வழங்கினார்.

Leave your comments here...