70வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து.!

அரசியல்சினிமா துளிகள்

70வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து.!

70வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து.!

இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது: அன்பான ரஜினிகாந்த் ஜி-க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நீண்ட ஆரோக்கியமான வாழ்வை ரஜினிகாந்த் பெற வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.


இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டரில் கூறியது:- தனது அயராத உழைப்பாலும், அபார திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து சூப்பர் ஸ்டாராக கோலோச்சி வரும் அன்பு சகோதரர் ரஜினிகாந்த் அவர்கள் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

ரஜினிகாந்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோரும் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்

Leave your comments here...