போதைப் பொருள் கட்டுப்பாட்டில் ஒத்துழைப்பு: இந்தியா-மியான்மர் இடையே 5வது இருதரப்புக் கூட்டம்

இந்தியாஉலகம்

போதைப் பொருள் கட்டுப்பாட்டில் ஒத்துழைப்பு: இந்தியா-மியான்மர் இடையே 5வது இருதரப்புக் கூட்டம்

போதைப் பொருள் கட்டுப்பாட்டில் ஒத்துழைப்பு: இந்தியா-மியான்மர் இடையே 5வது இருதரப்புக் கூட்டம்

போதைப் பொருள் கட்டுப்பாட்டில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து, இந்தியா – மியான்மர் இடையே 5வது இருதரப்புக் கூட்டம் காணொலி காட்சி மூலம் டிசம்பர் 10ம் தேதி நடந்தது.

இதில், இந்தியா தரப்பில் போதைப் பொருள் கட்டுப்பாடுப் பிரிவும், மியான்மர் சார்பில் போதைப் பொருள் கட்டுப்பாடு மத்தியக் குழுவும் பங்கேற்று ஆலோசனை நடத்தின. இந்தியக் குழுவுக்கு போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு இயக்குனர் திரு ராகேஷ் அஸ்தானா தலைமை தாங்கினார். மியான்மர் குழுவுக்கு அந்நாட்டின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு கமாண்டரும், போதைப் பொருள் கட்டுப்பாடு மத்தியக் குழுவின் இணை இயக்குனருமான பிரிகேடியர் ஜெனரல் வின் நயிங் கலந்து கொண்டார்.

இந்தியாவில் ஹெராயின் மற்றும் அம்பேட்டாமைன் போதைப் பொருள் கடத்தல், மியான்மர் எல்லையை ஒட்டிய வடகிழக்கு மாநிலங்களில் அதிகமாக இருப்பதாக திரு ராகேஷ் அஸ்தானா சுட்டிக் காட்டினார். இந்தியா-மியான்மர் எல்லையைத் தவிர்த்து, வங்காள விரிகுடா கடல் மார்க்கமாகவும் போதைப் பொருள் கடத்தல் நடைபெறுவது இரு நாடுகளுக்கும் புதிய சவாலாக உள்ளது.


போதைப் பொருள் அச்சுறுத்தலை முறியடிக்க, மியான்மருடன் தற்போதுள்ள தகவல் பரிமாற்ற வசதிகளை வலுப்படுத்துவதாக, இந்தியாவின் போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு உறுதி அளித்துள்ளது. போதைப் பொருள் கட்டுப்பாட்டில் இரு நாடுகள் இடையேயான ஒத்துழைப்பு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்தாலும், ‘யாபா’ என்ற மெத்தாஅம்பேட்டாமைன் போதை பொருள் மாத்திரைகள் உற்பத்தி அதிகரித்து வருவதாக மியான்மர் கமாண்டர் வின் நயிங் கவலை தெரிவித்தார்.

உளவுத் தகவல்களை சரியான நேரத்தில் பகிர்ந்து கொள்ளவும், போதைப் பொருள் கைப்பற்றப்படும்போது தொடர் விசாரணைகளை மேற்கொள்ளவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன. போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவதில், தற்போதுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் அளவிலான சந்திப்பை தொடர்ந்து நடத்தவும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.

சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் அல்லது அனுப்பப்படும் போதைப் பொருட்கள் பற்றிய தகவல்களை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளவும், போதை பொருள் கடத்தலைத் தடுப்பதில், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.

Leave your comments here...