பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டத்திருத்த மசோதா – மஹாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. இதனைத்தடுக்க சில மாநில அரசுகள் பல்வேறு சட்டத்திருத்தங்களை கொண்டுவந்து சட்டங்களை கடுமையாக்கி வருகின்றன.

அந்த வகையில், மஹாராஷ்டிர அரசு, பாலியல் குற்றங்களை தடுக்க ‛சக்தி திட்டம்’ என்னும் புதிய சட்டத்திருத்த மசோதாவை உருவாக்கியுள்ளது. இந்த சட்ட மசோதாவிற்கு மஹாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மசோதாவின் படி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மசோதா, வரவிருக்கும் குளிர்கால கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டு, நிறைவேற்றி நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave your comments here...