முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டத்தினை தடுப்பதாக மதுரை எம்பி வெங்கடேசனை கண்டித்து பொதுமக்கள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு..!

அரசியல்

முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டத்தினை தடுப்பதாக மதுரை எம்பி வெங்கடேசனை கண்டித்து பொதுமக்கள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு..!

முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டத்தினை தடுப்பதாக மதுரை எம்பி வெங்கடேசனை கண்டித்து பொதுமக்கள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு..!

முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தின் வாயிலாக மக்களுக்கு குடிநீர் பற்றாகுறையை தீர்க்கும் தமிழக அரசு திட்டத்தினை வரவிடாமல் தடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை எம்பி வெங்கடேசன் கண்டித்து போஸ்டர் பொதுமக்கள் ஒட்டியுள்ளார்கள்.

மதுரை நகருக்கான முல்லை பெரியாறு குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பேசி முதல்வர் முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கு வதற்கான கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, மதுரையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ரூ.1,295 கோடி மதிப்பீட்டிலான முல்லை பெரி யாறு கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அத்துடன் ரூ.31 கோடி யில் கட்டப்பட்டுள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கூடுதல் கட்டிடம் உள்ளிட்ட பல் வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஹார்விபட்டி எஸ்ஆர்வி.நகர் மற்றும் இந்திரா நகர் பொதுமக்கள் கூறுவது: மதுரை பாராளமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த நபர்கள் ஹார்விபட்டி பூங்காவில் நடைபயிற்சி செல்வதற்காகவே இத்திட்டத்தை சிலர் தடுப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் வருவதை தடுப்பதாகவும் இத்திட்டத்தை சிலரின் சுயலாபத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனும் துணை போவதாகும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை கண்டித்து திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் நோட்டீஸ் ஒட்டி உள்ளார்கள். மதுரை பாராளமன்ற உறுப்பினரை கண்டித்து நோட்டீஸ் ஒட்டி உள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Leave your comments here...