சின்னத்திரை நடிகை சித்ரா தூக்குப் போட்டு தற்கொலை

சினிமா துளிகள்

சின்னத்திரை நடிகை சித்ரா தூக்குப் போட்டு தற்கொலை

சின்னத்திரை நடிகை சித்ரா தூக்குப் போட்டு தற்கொலை

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வருகிறார். இந்த சீரியல் மிகவும் பிரபலம் என்பதால், இவருக்கு தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.

இந்நிலையில் இன்று (09.12.20) அதிகாலை சென்னை அருகே உள்ள நசேரத்பேட்டையில் இருக்கும் தனியார் ஹோட்டலில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகை சித்ராவின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் சித்ராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.சமீபத்தில் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. விரைவில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave your comments here...