சமூகவலைத்தளத்தில் அவதூறு பரப்பிய திமுக ஐ.டி விங்க் நிர்வாகி சைபர் க்ரைம் போலிசாரால் கைது.!

அரசியல்

சமூகவலைத்தளத்தில் அவதூறு பரப்பிய திமுக ஐ.டி விங்க் நிர்வாகி சைபர் க்ரைம் போலிசாரால் கைது.!

சமூகவலைத்தளத்தில் அவதூறு பரப்பிய திமுக ஐ.டி விங்க் நிர்வாகி  சைபர் க்ரைம் போலிசாரால் கைது.!

திருச்சி மாநகரம் அண்ணாமலை நகரில் வசித்து வருபவர் அய்யாக்கண்ணு. இவர் தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவராகவும் உள்ளார்.

இவர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி அய்யாக்கண்ணு மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பி.எம்.டி நகரைச் சேர்ந்த சேர்ந்த திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ஜெயச்சந்திரன்(40) என்பது தெரியவந்தது.

இவர் போலி முகவரிகளில் 2 ஆண்டுகளாக அய்யாக்கண்னு குறித்து அவதூறு பரப்பி வந்ததும் தெரியவந்தது.அவரை அதிகாலையில் கைது செய்த போலிசார் விசாரணைக்காக திருச்சி அழைத்துச் சென்றனர்.

Leave your comments here...