திருஞானசம்பந்தரை இழிவுபடுத்திப் பேசும் திருமாவளவன் – இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் எச்சரிக்கை..!

அரசியல்

திருஞானசம்பந்தரை இழிவுபடுத்திப் பேசும் திருமாவளவன் – இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் எச்சரிக்கை..!

திருஞானசம்பந்தரை  இழிவுபடுத்திப் பேசும் திருமாவளவன் – இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் எச்சரிக்கை..!

திருஞானசம்பந்தரை இழிவுபடுத்திப் பேசும் திருமாவளவனை உலகெங்கும் தமிழர்கள் கிளர்ந்தெழுந்து விரட்டி அடிப்பார்கள் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- கி.மு. 322 ஆம் ஆண்டுகளில் பல தேசங்களை வெற்றி கொண்ட சந்திரகுப்த மௌரியர் வாழ்நாள் இறுதியில் சமண மதத்தை தழுவினார். அதனால் அவர் தன்னுடைய மகன் பிந்துசாரருக்கு முடிசூட்டிவிட்டு எண்ணாயிரம் சமணர்களுடன் தென்னகம் கர்நாடாவுக்கு சென்றடைந்தார். அதனால் அவர்கள் எண்ணாயிரம் சமணர்கள் எனப்பட்டனர்.

கர்நாடகாவில் பல பேர் சமண மதத்தை தழுவினார்கள். அவர்களும் எண்ணாயிரம் சமணர்கள் என்றே வழங்கப்பட்டனர். சந்திரகுப்த மௌரியர் மறைவுக்குப்பிறகு கர்நாடகாவிலிருந்து சமண மதம் தமிழகத்தில் பரவியது. அவர்களும் எண்ணாயிரம் சமணர்கள் எனப்பட்டனர். எண்ணாயிரம் சமணர் என்பது எண்ணிக்கையைக் குறித்தது அல்ல. அது அவர்களின் வம்சத்தை குறிப்பதாகும்.

கி.பி.400 ஆண்டு காலத்தில் சமணர்கள் அரசர்களை தங்கள் கைகளில் போட்டுக் கொண்டு தமிழகத்தில் சமண மதத்தை அதிக அளவில் பரப்பினார்கள். பல இந்து தெய்வ ஆலயங்களை தகர்த்து சமண பீடங்களாக்கினர். கி.பி.600 ஆம் ஆண்டுகளில் அறியப்பட்ட திருநாவுக்கரசரையும் சமண மதத்திற்கு மாற்றினார்கள். மீண்டும் சைவ சமயத்திற்கு திரும்பிய திருநாவுக்கரசரை கொல்லுவதற்கு பல்லவ மன்னன் மகேந்திர வர்மனை தூண்டிவிட்டு சமணர்கள் பல முயற்சிகள் செய்தனர். சிவபெருமான் அருளால் திருநாவுக்கரசர் உயிர்தப்பினார். இச்சமணர்களும் எண்ணாயிரம் சமணர்கள் வழி வந்தவர்கள்தான்.

வட நாட்டில் இருந்து வந்த சமணர்களும் பவுத்தர்களும் அரசர்களை கைக்குள் போட்டுக் கொண்டு இந்துக்களை எல்லாம் மதமாற்றம் செய்தனர். இந்து கோயில்களை எல்லாம் புத்த விகார்களாகவும் சமண பீடங்களாகவும் மாற்றினார்கள். அத்தகைய வேளையில்தான் சிவபாத இருதயர் சமணர்களாலும் பவுத்தர்களாலும் அழிக்கப்பட்டு வரும் இந்து மதத்தை தடுத்துக் காத்து செழிக்க வைக்கும் வகையில் தனக்கு ஒரு மகன் வேண்டும் என்று சிவக்கடவுளிடத்தில் வேண்டி தவம் இருக்கின்றார். அதன் பலனாகவே சிவபாத இருதயருக்கு திருமுருகப் பெருமானின் அம்சமாக திருஞானசம்பந்தர் மகனாக அவதரிக்கின்றார்.

சமண மதத்தை தழுவிய பாண்டிய மன்னன்வெப்புநோயைகுணப்படுத்தி திருஞானசம்பந்தரிடம் எண்ணாயிரம் சமணர்கள் அனல்வாதம் புனல்வாதம் புரிந்தனர். வாதத்தில் தோற்பவர்கள் கழுமரம் ஏற வேண்டும் என்பதை திருஞானசம்பந்தரும் எண்ணாயிரம் சமணர்களும் ஒப்புக் கொள்ளப்பட்ட முடிவு. ஆகையினால் திருஞானசம்பந்தரிடம் தோற்ற எண்ணாயிரம் சமணர்கள் கழுமரம் ஏற்றப்பட்டார்கள்.

கழுமரம் ஏற்றப்பட்ட எண்ணாயிரம் சமணர்கள் என்றால் எட்டாயிரம் சமணர்கள் என்று பொருள் அல்ல.
திருஞானசம்பந்தரிடம் எட்டாயிரம் பேர் வாதம் புரியவில்லை. அவருடன் வாதம் புரிந்தவர்கள் மட்டுமே கழுமரம் ஏற்றப்பட்டனர். எண்ணாயிரம் சமண வம்சத்தைச் சேர்ந்த சிலர் என்று கொள்ள வேண்டும்.
ஒப்பந்தப்படி தோற்றவர்கள் கழுமரம் ஏற்றப்பட்டார்கள். அதையும் அரசனே நடத்தி இருக்கின்றான்.

இவ்வாறு இருக்க திருஞானசம்பந்தர் வேண்டுமென்று கத்தியை எடுத்துச் சென்று எட்டாயிரம் சமணர்களை விரட்டி விரட்டிக் கொன்றதைப் போல் பேசுவது கேடுகெட்டச் செயல்! திருமாவளவன் தன்னை தலித் என்று பறைச்சாற்றிக் கொள்வது அவருடைய சொந்த விருப்பம்.அதற்காக ஒட்டு மொத்த சமணர்களையும் பவுத்தர்களையும் தலித் என்று உரிமை கொண்டாடுவது மிகவும் மட்ட ரகமான சாதி வெறி மன நோய்.

சைவத்தையும் தமிழையும் அயல் மத ஆதிக்கத்தில் இருந்து மீட்ட தமிழாகரர் திருஞானசம்பந்தப் பெருமான். சைவ சமயத்தின் ஆச்சாரியர் பெருமக்களின் ஒருவரும், சமயக் குரவர்களில் முதல்வரும், முருகப்பெருமானின் அம்சமான ஞானசம்பந்தப் பெருமானை களங்கப் படுத்த நினைக்கும் திருமாவளவனுக்கு உண்மை வரலாற்றை உரைக்கின்றோம் உணர்ந்து மன்னிப்புக் கோரவில்லை எனில் தமிழின துரோகம் புரிந்த குற்றத்திற்காக திருமாவளவனுக்கு எதிராக ஜனநாயக அறப்போராட்டங்களை நடத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave your comments here...