நாட்டில் பொருளாதார குற்றங்களில் ஈடுபடும் ஒவ்வொருவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – நிர்மலா சீதாராமன்

இந்தியா

நாட்டில் பொருளாதார குற்றங்களில் ஈடுபடும் ஒவ்வொருவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – நிர்மலா சீதாராமன்

நாட்டில் பொருளாதார குற்றங்களில் ஈடுபடும் ஒவ்வொருவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – நிர்மலா சீதாராமன்

நாட்டில் பொருளாதார குற்றங்களில் ஈடுபடும் ஒவ்வொருவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் கீழ் இயங்கும் தலைமை கடத்தல் தடுப்பு நுண்ணறிவு மற்றும் விசாரணை அமைப்பான வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் 63-வது நிறுவன தின விழாவில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

இந்தியாவில் நடைபெற்ற கடத்தல்கள் குறித்த அறிக்கை 2019-20-ஐ இந்த நிகழ்ச்சியின்போது திருமதி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். தங்கம், அந்நிய செலாவணி, போதை மருந்து உள்ளிட்ட பல்வேறு கடத்தல்கள் குறித்து இந்த அறிக்கை விவரிக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்:- கடத்தல்களையும், குற்றச் செயல்களையும் திறம்படத் தடுத்து வரும் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் அலுவலர்களைப் பாராட்டினார். கொரோனா பெருந்தொற்றின் போதும் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்ததாக திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார்.இருந்த போதிலும், நாட்டில் பொருளாதார குற்றங்களில் ஈடுபடும் ஒவ்வொருவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

இதில் நிதி செயலாளர் டாக்டர் அஜய் பூஷன் பாண்டே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சிறப்பாக பணிபுரிந்த வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Leave your comments here...