மிகக்குறைந்த விலையில் பாதுகாப்பான தடுப்பூசி கிடைக்கும் – பிரதமர் மோடி
கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மக்களவை, மாநிலங்களவை இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காணொலி மூலமாக பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதில், நமது விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர். குறைந்த விலையில், பாதுகாப்பான மருந்தை உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. இதனால் தான் உலக நாடுகள் இந்தியாவை கவனித்து வருகின்றன. கொரோனா தடுப்பூசி இன்னும் சில வாரங்களில் தயாராகிவிடும் என நிபுணர்கள் நம்புகின்றனர். விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன், இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி துவங்கும்.
Speaking at the All Party Meeting. https://t.co/TZaJ5DJBXz
— Narendra Modi (@narendramodi) December 4, 2020
சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும். இந்தியாவில் 8 தடுப்பூசிகள் 3ம் கட்ட பரிசோதனையில் உள்ளன. மிக குறைந்த விலையில், பாதுகாப்பான தடுப்பூசி கிடைக்கும்.தடுப்பு மருந்து விலை மற்றும் அது குறித்து முடிவு தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு பணியாற்றி வருகிறது. பொது மக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, முடிவு எடுக்கப்படும். கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து, மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்றி வருகிறது. தடுப்பூசி விநியோகத்தில் இந்தியாவுக்கு அனுபவம் உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
தடுப்பூசி களத்தில், இந்தியாவுக்கு பெரிய மற்றும் அனுபவம் வாய்ந்த நெட்வொர்க் உள்ளது. அதனை, முழுவதும் பயன்படுத்துவோம். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், தங்களின் கருத்துகளை எழுத்துப்பூர்வமாக அனுப்பி வைக்கும்படி கேட்டு கொள்கிறேன். அவை தீவிரமாக பரிசீலனை செய்யப்படும் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.
Leave your comments here...