தொடர் மழையால் பேராவூரணி அருகே மழை நீரில் மூழ்கிய வீடுகள்.!

சமூக நலன்தமிழகம்

தொடர் மழையால் பேராவூரணி அருகே மழை நீரில் மூழ்கிய வீடுகள்.!

தொடர் மழையால் பேராவூரணி அருகே மழை நீரில் மூழ்கிய வீடுகள்.!

தஞ்சை மாவட்டம், பழைய பேராவூரணி அருகே மேலத்தெருவில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளம் ஏற்பட்டு மேலத்தெருவில் உள்ள வீடுகள் நீர் சூழ்ந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமலும், உணவுக்கு கஷ்டப்படும் நிலையும் உருவாகியுள்ளது. வீடுகள் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பாம்பு மற்றும் விஷபூச்சிகள் வீடுகளுக்குள் செல்லும் அபாயம் உள்ளது.இப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலை தனிப்பட்ட நபர்கள் தூர்த்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுவரை இப்பகுதியில் கனமழை இல்லாததால் இது போன்று வீடுகள் நீரில் மூழ்கியது இல்லை. இப்போது நீர் வீடுகளை சூழ்துள்ளதால் வடிகால் ஆக்கிரமிப்பால்தான் மழை நீர் வடியவில்லை என்பது பொது மக்களுக்கு தெரியவந்துள்ளது.

தகவலறிந்த அமமுக நகர செயலாளர் எஸ்.பாண்டியராஜன் சம்பவ இடத்தை பார்வையிட்டு பேரூராட்சி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்து, பேராவூரணி செயல் அலுவலர் மு. மணிமொழியன்,ஒரத்தநாடு பேரூராட்சி செயல்அலுவலர் ப.ரவிசங்கர் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் அம்மாபேட்டை எல்.ராமேஷ், மெலட்டூர் ஆர்.குமரேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் மற்றும் பேரூராட்சி இளநிலை பொறியாளர்கள், பணி ஆய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை வடிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

Leave your comments here...