அறிவுசார் சொத்து ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.!

உலகம்

அறிவுசார் சொத்து ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.!

அறிவுசார் சொத்து ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.!

இந்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையும், மத்திய வர்த்தக தொழில் துறை அமைச்கமும், அமெரிக்க வர்த்தகத் துறையின் அமெரிக்க காப்புரிமை மற்றும் வணிக முத்திரை அலுவலகத்துடன், இம்மாதம் 2ஆம் தேதியன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை செயலாளர் டாக்டர் குருபிரசாத் மொகபாத்ரா, வணிகத்துக்கான அறிவுசார் சொத்துகள் துறை சார்புநிலை செயலாளர் மற்றும் அமெரிக்க காப்புரிமை மற்றும் வணிக முத்திரை அலுவலகத்தின் இயக்குநர் ஆண்டிரேய் ஐயான்கு ஆகியோர் காணொலி மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஆண்டு பிப்ரவரி 19 அன்று, அமெரிக்க அமைச்சரவையால் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அறிவுசார் சொத்துத் துறை தொடர்பான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளுக்கிடையேயான அறிவுசார் சொத்துகள் சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்தும்.

அறிவுசார் சொத்து குறித்த சிறந்த நடைமுறைகள், அனுபவங்கள், அறிவு ஆகியவை, பொதுமக்கள், தொழில்துறையினர், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி-மேம்பாட்டு நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.பயிற்சித் திட்டங்கள், நிபுணர்கள் பரிமாற்றம், தொழில்நுட்ப பரிமாற்றங்கள் ஆகியவற்றுடன் இதர நடவடிக்கைகளும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.

Leave your comments here...