செருப்பில் வைத்து தங்கம் கடத்தல் : வெளிநாட்டு பணம் உட்பட்ட தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்..!

தமிழகம்

செருப்பில் வைத்து தங்கம் கடத்தல் : வெளிநாட்டு பணம் உட்பட்ட தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்..!

செருப்பில் வைத்து தங்கம் கடத்தல் : வெளிநாட்டு பணம் உட்பட்ட தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்..!

சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட பரிசோதனையில், ரூ.12 லட்சம் மதிப்புள்ள தங்கம், ரூ.6.5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் கடந்த திங்கள் கிழமை வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது ராமநாதபுரத்தைச சேர்ந்த முகமது ஹாசன் அலி(23) என்பவர் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னை வந்தார். அவரை சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அப்போது முகமது ஹாசன் மாற்று வழியில் செல்ல முயன்றார்.


அப்போது அவரது செருப்பு கழன்று விழுந்தது. அதை எடுத்து கொடுக்க சுங்க அதிகாரி முயன்றார். அப்போது, அந்த செருப்பு வழக்கத்துக்கு மாறாக அதிக எடையுடன் இருந்தது தெரிந்தது. அதன் மேற்பட்டைகளும் அகலமாக இருந்தன.அதை சோதித்து பார்த்ததில், 4 பாக்கெட்டுகளில் தங்க பசை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 239 கிரோம் சுத்த தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.12 லட்சம்.


ராமநாதபுரத்தைச் சேர்ந்த சாகுபர் சாதிக்-21 என்பவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் துபாய் செல்ல தயாராக இருந்தார். அவரிடம் வெளிநாட்டு பணம் அதிகளவில் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரிடமிருந்து கணக்கில் காட்டப்படாத 7 ஆயிரம் சவுதி ரியால்கள், 7 ஆயிரம் அமெரிக்க டாலர் ஆகியவை அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.18.5 லட்சம் என சென்னை சர்வதேச விமானநிலையத்தின் சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Leave your comments here...