விவசாயிகள் போராட்டத்தில் பிரிவினைவாதிகள் : பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா குற்றச்சாட்டு.!

அரசியல்

விவசாயிகள் போராட்டத்தில் பிரிவினைவாதிகள் : பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா குற்றச்சாட்டு.!

விவசாயிகள் போராட்டத்தில்  பிரிவினைவாதிகள் : பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா குற்றச்சாட்டு.!

டில்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா நேற்று கூறியதாவது: டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாப் பிரிவினைவாதிகளான காலிஸ்தான் மற்றும் மவோயிஸ்ட்கள் நுழைந்துள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான அறிவிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. தற்போது பிரிவினைவாத சக்திகள் போராட்டத்தில் நுழைந்துள்ளதை அறிந்து டில்லி பற்றி எரிய வேண்டும் என்ற தங்கள் ஆசையை நிறைவேற்ற துடிக்கிறது. ஆம் ஆத்மிக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை; இதில் அவர்கள் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கவேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை; அதை நாங்களும் ஆதரிக்கிறோம். எங்கள் அறிவிக்கையின்படி விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை மண்டிக்கு உள்ளேயும் வெளியேயும் விற்பனை செய்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளோம்’ என ஆம் ஆத்மி தரப்பு தெரிவித்துள்ளது.

Leave your comments here...