2025-க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்- ஹர்ஷ் வர்தன்

இந்தியா

2025-க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்- ஹர்ஷ் வர்தன்

2025-க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்- ஹர்ஷ் வர்தன்

காச நோய்க்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்”. காச நோய் பற்றிய முன்னெச்சரிக்கை, பரிசோதனை மற்றும் குணப்படுத்துதல் குறித்து பெருவாரியான மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விரிவான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

காச நோய் மேலாண்மை குறித்து பல்வேறு தரப்பினருடன் நடைபெற்ற கூட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.இந்தியாவில் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் நீக்குவதற்காக சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து செயல்பட ஒருங்கிணைந்த தளம் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“காசநோயை நீக்குவதில் அனைவரின் ஆதரவு முக்கியம். 11 மாதங்களாக பெருந்தொற்றுக்கு எதிராக நாடு போராடி வருகிறது. கொவிட் நோய் தொற்றுக்கு முக்கியத்துவம் அளித்துவரும் நிலையில், வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்கும் நமது இலக்கிலிருந்து நாம் பின் வாங்கக் கூடாது”, என்று அவர் கூறினார்.

Leave your comments here...