திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபதிருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்.!

ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபதிருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்.!

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபதிருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்.!

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபதிருவிழா கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது . விழாவின் முக்கிய நிகழ்வாக மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு வரும் 29 ம் தேதி மாலையில் நடைபெறுகிறது .

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் , கார்த்திகை தீப திருவிழா மிக சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது . அதன்படி இந்த கார்த்திகை திருவிழா உற்சவம் இன்று துவங்கி வரும் 30 ம் தேதி வரை பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது . அந்த வகையில் விழாவின் துவக்கமாக கார்த்திகை கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது.முன்னதாக முருகபெருமான் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரம் அருகில் எழுந்தருளிட தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகளையடுத்து , மங்கள வாத்தியங்கள் வேதமந்திரங்கள் முழங்கிட கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது.

கார்த்திகை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 28 ம் தேதி மாலை 6.30 மணிமுதல் 7.00 மணிக்குள் முருகபெருமானின் பட்டாபிஷேகமும் , விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 29 ம் தேதியன்று மாலை 06.00 மணியளவில் உச்சிபிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்படும் நிகழ்வும் நடைபெறுகிறது . மேலும் இதில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவிட் -19 கொரேனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் கோயிலில் நடைபெறும் கார்த்திகை திருவிழாக்கள் சம்மந்தமான அனைத்து நிகழ்வுகளும் உள்திருவிழாக்களாக நடைபெற கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் யாரும் விழாக்களில் பங்கேற்க அனுமதியில்லை .

Leave your comments here...