ஆவடி மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டம்.!

தமிழகம்

ஆவடி மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டம்.!

ஆவடி மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின்  முதல் பொதுக்குழு கூட்டம்.!

ஆவடி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டப் பின்னர் ” ஆவடி மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் ” முதல் பொதுக்குழு கூட்டம் இன்று (20-11-20) மாலை 5.30 மணியளவில் ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

அனைத்து பிரிவு சங்க(Category Association) நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பெரும் அளவில் கலந்து கொண்டனர். கூட்டமைப்பின் மாநில பொதுசெயலாளர் திரு.இரா.சீத்தாராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தலைவராக திரு.N.தினகர் TPI அவர்களும், செயலாளராக திரு.M.சங்கர் AE அவர்களும், பொருளாளராக திரு.J.சத்தியமூர்த்தி RI அவர்களும் ஏனைய நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

அனைத்து பிரிவு சங்க நிர்வாகிகளும் தீர்மானங்களை முன் மொழிந்தும் வழி மொழிந்தும் பேசினார்கள். மேலாளர் திருமதி.P.செல்வராணி நன்றி கூறினார். அனைத்து உறுப்பினர்களும் எழுச்சியுடனும், உற்சாகத்துடனும் கலந்து கொண்டது ஆவடியில் ஒரு வலிமையான சங்கம் உதயமானதை எடுத்துக்காட்டியது.

செய்தி
நமது நிருபர் : வாசு

Leave your comments here...