சென்னை விமானநிலைய சுங்கத்துறையால் ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் ; 2 பேர் கைது.!

தமிழகம்

சென்னை விமானநிலைய சுங்கத்துறையால் ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் ; 2 பேர் கைது.!

சென்னை விமானநிலைய சுங்கத்துறையால் ரூ.2.06 கோடி மதிப்பிலான  தங்கம் பறிமுதல் ; 2 பேர் கைது.!

சென்னை விமானநிலைய சுங்கத்துறையால் ரூ.2.06 கோடி மதிப்பிலான 4 கிலோ தங்கம்
பறிமுதல்

ரகசிய தகவலின் அடிப்படையில், வெள்ளியன்று துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமானத்தில், ஒரு இருக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1448 கிராம் எடை கொண்ட தங்கப்பசை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதிலிருந்து, 1.3 கிலோ எடையுள்ள, ரூ.67.25 லட்சம் மதிப்புள்ள 24 காரட் தங்கம் சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

முன்னதாக, வியாழக்கிழமை அன்று, ரகசிய தகவலின் அடிப்படையில், துபாயில் இருந்து வந்த கடலூரைச் சேர்ந்த சாகுல் அமீது, 39, எஸ்.பி.பட்டணத்தைச் சேர்ந்த முகமது பைசுல், 24, சென்னையைச் சேர்ந்த பர்கத் பாஷா, 36, சேலத்தைச் சேர்ந்த சையது அகமது, 26, பாசி பட்டணத்தைச் சேர்ந்த ஆதம், 41, சென்னையைச் சேர்ந்த சக்லா சர்தார், 55 ஆகிய 6 பயணிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.


அவர்களைச் சோதனையிட்டதில், மறைத்து எடுத்து வரப்பட்ட 3 கிலோ எடை கொண்ட 19 பாக்கெட் தங்க பசை பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதிலிருந்து 2.6 கிலோ தங்கம் தேறியது. கைப்பையில் இருந்த ஒரு தங்க சங்கிலி, 100 கிராம் எடையுள்ள தங்கத் தகடு ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.1.3 கோடி மதிப்புள்ள மொத்தம் 2.7 கிலோ எடை கொண்ட தங்கம் சுங்கச் சட்டம் 1962-ன் படி பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.மொத்தம் 4 கிலோ எடை கொண்ட ரூ. 2.06 கோடி மதிப்பிலான 24 காரட் சங்கம் சுங்கச்சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave your comments here...