சமூக நலன்
கஜா புயல் பாதிப்பு: 10 பேருக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இலவசமாக வீடு..!

தமிழகத்தில் கஜா புயல் தாக்கியபோது டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமான பேர் உதவிக்கரம் நீட்டினர். குறிப்பாக ரஜினி மக்கள் மன்றத்தினர் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினிகாந்த் தரப்பில் சென்னையில் ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து 6 லாரிகளில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் அனுப்பப்பட்டன.
இந்நிலையில் ரஜினியின் அறிவிப்பின்படி தற்போது நாகை மாவட்டத்தில் கோடியக்கரை, தலைஞாயிறு ஆகிய பகுதிகளில் வீடுகளை இழந்து 10 பேருக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இலவசமாக வீடு கட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை ரஜினிகாந்த் போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு வரவழைத்து சாவிகளை வழங்கினார்.