கிழக்கு லடாக்கில் கடும் குளிரை சமாளிக்க ராணுவ படை வீரர்களுக்கு நவீன குடியிருப்புகள் தயார்.!

இந்தியா

கிழக்கு லடாக்கில் கடும் குளிரை சமாளிக்க ராணுவ படை வீரர்களுக்கு நவீன குடியிருப்புகள் தயார்.!

கிழக்கு லடாக்கில் கடும் குளிரை சமாளிக்க  ராணுவ படை வீரர்களுக்கு நவீன குடியிருப்புகள் தயார்.!

இந்தியா சீன ராணுவத்துக்கு இடையே, லடாக் எல்லையில், கடந்த மே மாதம் முதல், மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாட்டு ராணுவமும், ஆயிரக்கணக்கான வீரர்களை, குவித்து உள்ளன.

அவர்கள் எல்லையின் முக்கிய பகுதிகளில் மாதக் கணக்கில் முகாமிட்டு உள்ளனர். பதற்றத்தை தணித்து, எல்லையில் அமைதி திரும்ப, இரு தரப்பு ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான எட்டு சுற்று பேச்சு முடிவடைந்துள்ளது. இதன் கடைசி சுற்று பேச்சில், மூன்று கட்டங்களாக, படைகளை விலக்கிக் கொள்ள, இரு தரப்பும் ஒப்புக் கொண்டன. இந்நிலையில், ஒன்பதாம் சுற்று பேச்சு விரைவில் துவங்கும் என, கூறப்படுகிறது.


அமைதி பேச்சு ஒருபுறம் நடைபெற்றாலும், எல்லையில் பதற்றம் இன்னும் முழுமையாக தணியவில்லை. எனவே, சீன ராணுவத்தினரின் நகர்வை கண்காணிப்பற்காக, பல்லாயிரம் அடி உயர மலைகளின் பல முக்கிய பகுதிகளில், நம் ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.லடாக்கில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. பல உயரமான மலைப்பகுதிகளில், ‘மைனஸ் 40 டிகிரி’ வரையில் குளிர் உள்ளதாகவும், அங்கு, 30 முதல், 40 அடி வரை, பனிப்பொழிவு காணப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், வீரர்கள், கடும் குளிரில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, நவீன வசிப்பிடங்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன.


இந்த, கதகதப்பான கூடாரங்களில், மின்சாரம், குடிநீர், தண்ணீர் சுட வைக்கும் வசதி, சுகாதார வசதிகள் ஆகியவை உருவாக்கி தரப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மிக கடுமையான குளிர் பிரதேசங்களில் அணியக் கூடிய பாதுகாப்பு கவச ஆடைகள், அமெரிக்க ராணுவத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, நம் வீரர்கள், 15 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave your comments here...