ரூபாய் 22 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல்.!

தமிழகம்

ரூபாய் 22 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல்.!

ரூபாய் 22 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல்.!

சென்னை ரூபாய் 22 லட்சம் மதிப்புள்ள 420 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல் செய்யப்பட்டது.

உளவுப்பிரிவினரிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில் தங்கம் கடத்த முற்பட்ட இரண்டு பேர் இன்று தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

எமிரேட்ஸ் விமானம் ஈ கே 542 மூலம் துபாயில் இருந்து சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 34 வயதான சையது அப்தாஹீர் என்பவர், விமான நிலைய சுங்கத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.


அவரை சோதனையிட்டதில் 260 கிராம் எடையிலான தங்கப்பசை அடங்கிய 2 பொட்டலங்களை அவரது உடலில் இருந்து சுங்கத் துறையினர் கைப்பற்றினர். அவரிடமிருந்து மொத்தம் ரூபாய் 11.7 லட்சம் மதிப்பிலான 221 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், எமிரேட்ஸ் ஈ கே 544 விமானத்தின் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்த 37 வயதான ராஜ் முகமது என்பவர் சந்தேகத்தின் பேரில் சுங்கத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரை சோதனை செய்தபோது, 224 கிராம் எடையிலான தங்கப் பசை அடங்கிய நான்கு பொட்டலங்களை அவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து ரூபாய் 10.3 லட்சம் மதிப்பிலான 199 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.மொத்தமாக ரூபாய் 22 லட்சம் மதிப்பில் 420 கிராம் தங்கம், சுங்க சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave your comments here...