கோல்டன் விசா நீட்டிப்பு : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு நீட்டிக்க முடிவு

உலகம்

கோல்டன் விசா நீட்டிப்பு : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு நீட்டிக்க முடிவு

கோல்டன் விசா நீட்டிப்பு : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு நீட்டிக்க முடிவு

வெளிநாட்டுத் திறமைகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே குறிப்பிட்ட பிரிவில் பட்டம் பெற்றவர்களையும், திறமையானவர்களையும் ஈர்க்கும் பொருட்டு 10 ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளில் தங்கி பணியாற்றும் ஒரு சிறப்புமிக்க விசா தான் இந்தக் கோல்டன் விசா.

இந்த விசா முறையை அடுத்த சில ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஐக்கிய அரபு எமிரேட்சின் (யு.ஏ.இ) துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், ஒப்புதல் அளித்துள்ளார்.


இது குறித்து டுவிட்டரில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பி.எச்டி., பட்டம் பெற்றவர்கள், அனைத்து மருத்துவர்கள், கணினித் துறைகள், எலக்ட்ரானிக்ஸ், புரோகிராமிங், எலக்ட்ரிக்கல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்டிவ் டெக்னாலஜி ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற அனைத்து பொறியியலாளர்களும் இந்த புதிய கோல்டன் விசாக்களைப் பெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் அதிக மதிப்பெண்கள் (3.8 அல்லது அதற்கு மேற்பட்டவை) பெறும் நபர்களுக்கும் இந்த கோல்டன் விசாக்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா மற்றும் வைரஸ் தொற்றுநோயியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற பட்டதாரிகளுக்கும் இந்த விசாக்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அமெரிக்கா அரசு டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் தனது விசா கட்டுப்பாடுக்களை அதிகரிக்கத் துவங்கிய போது பல நாடுகளை இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. கனடா, அரபு நாடுகள் எனப் பல நாடுகள் விசா மற்றும் குடியுரிமை சட்டத்தில் அதிகப்படியான தளர்வுகளை அறிவிக்கப்பட்ட காரணத்தால் பல நாடுகள் உலகம் முழுவதிலும் இருந்து திறமைகளை ஈர்க்க துவங்கியது. தற்போது டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தலில் தோல்வியை அடைந்த காரணத்தால் ஜோ பிடன் புதிய அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது ஆட்சியில் விசா கட்டுப்பாடுகள் அதிகளவில் தளர்வு அளிக்கப்பட்டு என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிற நாடுகளும் வெளிநாட்டுத் திறமைகளை ஈர்க்க விசா மற்றும் குடியுரிமை சட்டங்களில் தளர்வுகளைத் தொடர்கிறது.

Leave your comments here...