ராணுவ வீரர்கள் எங்குள்ளனரோ அங்கு தான் எனக்கு தீபாவளி : ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி.!

இந்தியா

ராணுவ வீரர்கள் எங்குள்ளனரோ அங்கு தான் எனக்கு தீபாவளி : ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி.!

ராணுவ வீரர்கள் எங்குள்ளனரோ அங்கு தான் எனக்கு தீபாவளி : ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி.!

பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும், ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் வகையில், எல்லை பகுதிக்கு சென்று, அவர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் ஆனது முதல் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இருக்கும் லோங்கெவலா ராணுவ மையத்தில் தீபாவளியை கொண்டாட அங்கு சென்றுள்ளார்.

அவருடன் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே உள்ளிட்டோரும் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.


ராணுவ வீரர்கள் மத்தியில் மோடி பேசுகையில்:- பிரதமர் பனிமலையோ, பாலைவனமோ ராணுவத்தினர் எங்கிருக்கிறார்களோ அங்குதான் எனக்கு தீபாவளி. உறையும் பனியிலும் அதிக வெப்பத்திலும், ராணுவ வீரர்கள் நாட்டை காக்கின்றனர். அவர்களின் தியாகம் போற்றுதலுக்குரியது. மக்களுடைய அன்பை உங்களுக்காக நான் கொண்டு வந்துள்ளேன்.

ராணுவத்தினர் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கும்போது நான் இருமடங்கு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடன் தீபாவளியை கொண்டாடும்போது தான் எனக்கு மனநிறைவு ஏற்படுகிறது. பாலைவனமோ, பனிமலையோ ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்தில் தான் எனக்கு தீபாவளி ராணுவ வீரர்களை கவுரவப்படுத்த மக்கள், தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும்.

130 கோடி இந்தியர்களும் உங்களுடன் தான் உள்ளனர். உங்களின் தைரியம் மற்றும் பலத்தை கண்டு ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுகின்றனர். நமது நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் இருந்து நமது தைரியமிக்க வீரர்களை, உலகின் எந்த சக்தியும் தடுத்து நிறுத்த முடியாது.


இந்தியா தனது பாதுகாப்பு திறனை அதிகரிக்கவும், பாதுகாப்பு துறையின் தன்னிறைவு அடையவும் தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறது. உள்நாட்டில் ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் கவனம் செலுத்தி வருகிறோம்.

நமது தைரியமிக்க வீரர்கள் பல சாதனைகளை படைத்துள்ளனர். நமது மேற்கத்திய எல்லையில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான், தனது பாவத்தை மறைக்க முயற்சி செய்தது. ஆனால், அந்நாட்டிற்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டது. லாங்கிவாலாவில் நடந்த போரை பல தலைமுறையினர் நினைவில் வைத்திருப்பார்கள். நமக்கு தேசநலனே முக்கியம். அதில் சமரசத்திற்கு எந்த இடமும் இல்லை. எல்லையை விரிவாக்க நினைக்கும் நாடு பற்றி உலகம் அறிந்து வைத்துள்ளன. எல்லையை விரிவாக்கும் காலம் 18 ம் நூற்றாண்டை சேர்ந்தது. இவ்வாறு அவர் பேசினார்.


மேலும் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்காக இல்லங்களில் தீபம் ஏற்றி மரியாதை செலுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Leave your comments here...