தங்க நகை சேமிப்பு திட்டத்தில் ரூ.150 கோடி ரூபாய் மோசடி : கேரளாவில் முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏ கமருதீன் கைது.!

அரசியல்இந்தியா

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் ரூ.150 கோடி ரூபாய் மோசடி : கேரளாவில் முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏ கமருதீன் கைது.!

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் ரூ.150 கோடி ரூபாய் மோசடி : கேரளாவில் முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏ கமருதீன் கைது.!

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம், மஞ்சேஸ்வரம் தொகுதி முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் கமருதீன். காங்கிரஸ் கூட்டணியில் முஸ்லிம் லீக் இருக்கிறது. காங்கிரஸ் கூட்டணியான யூ.டி.எஃப்-பின் காசர்கோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் கமருதீன் இருக்கிறார்.

கமாருதீன் சேர்மனாக இருக்கும் ஃபேஷன் ஜுவல்லரி நிறுவனத்தில் தங்க நகைகளுக்கான முதலீடுத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் சுமார் 800 பேரிடமிருந்து 150 கோடி ரூபாய்வரை பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், பணம் வாங்கியவர்களுக்கு நகைகள் வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக தங்க நகை சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். நகை மோசடி தொடர்பாக எம்.எல்.ஏ. எம்.சி. கமருதீன், மேலாண்மை இயக்குனர் பூக்கோயா தங்கல் ஆகியோருக்கு எதிராக 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக கேரள குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நகை மோசடி விவகாரம் தொடர்பாக நேற்று காசர் கோட்டில் உள்ள மாவட்ட போலீஸ் பயிற்சி மையத்தில் எம்.சி கமருதீனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் இறுதியில் அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் நகை மோசடியில் எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பு இருப்பது உறுதியானதை தொடர்ந்து அவரை கைது செய்ததாகவும், மேலும் இந்த வழக்கில் நகைக்கடையின் மேலாண்மை இயக்குனர் பூக்கோயா தங்கலை கைது செய்ய உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் கமருதீன் 13 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கமருதீன் மீது இதுவரை நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், “புகார்தாரர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், மோசடித் தொகையும் அதிகரிக்கும்’’ என்கிறனர் போலீஸார். மேலும் ஃபேஷன் ஜுவல்லரி எம்.டி-யையும் கைதுசெய்ய போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

Leave your comments here...