10 செயற்கை கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்.!

இந்தியா

10 செயற்கை கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்.!

10 செயற்கை கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்.!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அதில் நம் நாட்டுக்கு சொந்தமான செயற்கைகோள்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த வணிக ரீதியிலான செயற்கைகோள்களையும் விண்ணுக்கு செலுத்தி வருகிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது சிறிய வகை செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்காக எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளையும் இஸ்ரோ தயாரித்து வருகிறது. அவற்றையும் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.


இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்டை நாளை மறுநாள் (7-ந்தேதி) மாலை 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். இதற்கான இறுதிக்கட்ட பணியான 26 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ இன்று பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து ‘கவுண்ட்டவுனை’ முடித்து கொண்டு திட்டமிட்டப்படி நாளை மாலை 3.02 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்கிறது.


அத்துடன், இந்த ராக்கெட்டில் வணிக ரீதியிலான 9 செயற்கைகோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது. இதில் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த 1 தொழில்நுட்ப கண்டுப்பிடிப்பு செயற்கைகோள், லக்சம்பர்க் நாட்டைச் சேர்ந்த கிளியோஸ் ஸ்பேஸின் 4 கடல்சார் பயன்பாட்டு செயற்கைகோள்கள் மற்றும் அமெரிக்காவின் 4 லெமூர் செயற்கைகோள்களும் அடங்கும்.பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளது. 44.4 மீட்டர் உயரம் கொண்டது பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட். இது இந்தியாவின் 51-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும்.

Leave your comments here...