எனது தந்தை தொடங்கிய கட்சிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை – நடிகர் விஜய் அறிக்கை

அரசியல்சினிமா துளிகள்

எனது தந்தை தொடங்கிய கட்சிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை – நடிகர் விஜய் அறிக்கை

எனது தந்தை தொடங்கிய கட்சிக்கும் எனக்கும்  சம்பந்தமில்லை – நடிகர் விஜய் அறிக்கை

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றனர். நற்பணி மன்றங்களாக இருந்த விஜய் ரசிகர் மன்றங்கள், விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது.

விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகத்தை நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கவனித்து வந்தார். விஜய்யை முதல்வர் நாற்காலியில் அமர வைத்து பார்க்க வேண்டும் என்பது அவரது கனவு. இதுப்பற்றி பல பேட்டிகளில் அவர் கூறியிருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கடந்த நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த அனுபவம் பெற்றுள்ளார். தொடர்ந்து சட்டசபை தேர்தலுக்கும் தயாராகி வருகிறார். இதற்காக அவர் போட்டியிடும் தொகுதி பற்றியும் ஆவலுடன் மக்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று மறுபுறம் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி அதற்கான நடவடிக்கையில் இறங்கி வரவேண்டுமென்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதுபற்றி, நடிகர் விஜயின் தந்தை மற்றும் இயக்குனரான எஸ்.ஏ. சந்திரசேகர் கூறும்பொழுது, விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவே அரசியல் கட்சி தொடங்கப்பட்டு உள்ளது. நடிகர் விஜய் எதிர்காலத்தில் இந்த கட்சியில் இணைவாரா என்பது பற்றி அவரிடமே நீங்கள் கேட்கவேண்டும் என கூறியுள்ளார்.

இந்நிலையில், தந்தையின் கட்சி பதிவு குறித்து விஜய் தரப்பில் வெளியிட்ட அறிக்கை: ‘என் தந்தை அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். அவர் தொடங்கி உள்ள கட்சிக்கும், எனக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த தொடர்பும் இல்லை. அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது. என் தந்தை கட்சி தொடங்கி உள்ளார் என்பதற்காக என் ரசிகர்கள் அந்த கட்சியில் இணையவோ, கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். அந்தக்கட்சிக்கும் நமது இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் என் பெயரையோ, போட்டோவையோ, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...