இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்க ராஜ்நாத் சிங் உறுதி.!

இந்தியா

இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்க ராஜ்நாத் சிங் உறுதி.!

இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்க ராஜ்நாத் சிங் உறுதி.!

இந்திய இராணுவக் கல்லூரியின் வைரவிழா கொண்டாட்டங்களை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைத்தார்.

‘இந்தியாவின் தேசப் பாதுகாப்பு- எதிர்வரும் தசாப்தம்’ என்னும் தலைப்பிலான இரண்டு நாள் (2020 நவம்பர் 5-6) இணையக் கருத்தரங்கை துவக்கி வைத்து திரு சிங் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர், போரைத் தடுப்பதற்கான வல்லமையின் மூலம் தான் அமைதியை உறுதி செய்ய முடியும் என்று கூறினார். “அமைதி ஏற்படுவதற்கான ஆசை மட்டும் இருந்தால் போதாது, போரைத் தடுப்பதற்கான திறனும் இருந்தால் தான் அமைதியை நிலைநாட்ட முடியும் என்பதே நாடுகளின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் நமக்கு கற்றுக் கொடுத்துள்ள அடிப்படைப் பாடம் என்றால் அது மிகையாகாது,” என்று அவர் கூறினார்.

“துரதிஷ்டவசமாக, அமைதிக்கான ஆசை மற்றவர்களாலும் எதிரொலிக்கப்படவில்லை என்றால் உலகத்தில் நல்லிணக்கமான சூழலை கட்டமைப்பதற்கான முயற்சி வெற்றி அடையாது. பாதுகாப்பு, இறையான்மை மற்றும் தேச நலன்கள் குறித்த மாறுபட்ட சிந்தனைகளுக்கு இது வழிவகுக்கும்,” என்று அவர் கூறினார்.எதிர்வரும் காலத்தில் தேசப் பாதுகாப்புக்கான இந்தியாவின் லட்சியத்தை வழி நடத்தப் போகும் நான்கு விரிவான கொள்கைகளை பாதுகாப்பு அமைச்சர் எடுத்துரைத்தார்.

இந்தியாவின் இறையாண்மையையும், பிராந்திய ஒற்றுமையையும், வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் மற்றும் உள்நாட்டு சவால்களிடம் இருந்து பாதுகாக்கும் திறன்; இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் பாதுகாப்பான மற்றும் நிலையான சூழல்களை உருவாக்கும் திறன்; எல்லைகளைத் தாண்டி நமது மக்கள் வசிக்கும் மற்றும் நமது பாதுகாப்பு நலன்கள் சார்ந்த பகுதிகளில் நமது நலன்களை பாதுகாக்கும் அவாவில் உறுதியுடன் இருப்பது; மற்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ள உலகமயமாக்கப்பட்ட உலகத்தில், ஒரு நாட்டின் பாதுகாப்பு நலன் பகிர்ந்து கொள்ளக் கூடிய பொதுவான விஷயங்களில் இணைந்துள்ளது என்ற நம்பிக்கை ஆகியவையே இந்த நான்கு கொள்கைகளாகும்.

Leave your comments here...