அமெரிக்க ஆன்மீகத்தின் அடித்தடம் தேடி 36 நாட்களில் 15,251 கி.மீ மோட்டார் சைக்கிளில் பயணித்த சத்குரு.!

இந்தியாசமூக நலன்

அமெரிக்க ஆன்மீகத்தின் அடித்தடம் தேடி 36 நாட்களில் 15,251 கி.மீ மோட்டார் சைக்கிளில் பயணித்த சத்குரு.!

அமெரிக்க ஆன்மீகத்தின் அடித்தடம் தேடி  36 நாட்களில் 15,251 கி.மீ மோட்டார் சைக்கிளில் பயணித்த சத்குரு.!

அமெரிக்க பூர்வகுடி மக்களின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் ஆன்மீக முறைகளை அறிந்து கொள்வதற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணம் இனிதே நிறைவு பெற்றது.

டென்னஸி மாகாணத்தில் உள்ள ஈஷா உள்நிலை அறிவியல் மையத்தில் (Isha Institute of Inner Science) இருந்து மஹாளய அமாவாசை தினமான செப்டம்பர் 17-ம் தேதி அவர் தனது பயணத்தை தொடங்கினார்.

அங்கிருந்து, செருக்கி லேண்ட்ஸ், கொமான்ச்சி, மிஸிஸிபி, இல்லினாய்ஸ், மிசவ்ரி, நியூ மெக்ஸிகோ, கொலோரடோ உள்ளிட்ட 19 மாகாணங்களுக்கு பயணம் செய்தார்.

பயணத்தின் வழிநெடுகிலும் அமெரிக்க பூர்வகுடி மக்களின் கலாச்சார முக்கியத்துவம் மிகுந்த பல்வேறு இடங்களுக்கு அவர் சென்றார். குறிப்பாக, அமெரிக்காவின் முதல் தேசிய சின்னமாக கருதப்படும் 867 அடி உயரம் கொண்ட மடோ திப்பிலா கோபுரத்தையும் பார்வையிட்டார். இந்த இடத்தை 20 மாகாணங்களைச் சேர்ந்த பூர்வகுடி மக்கள் புனித ஸ்தலமாக கருதுகின்றனர்.

இதேபோல், லகோட்டா மற்றும் க்ரொவ் மாகாணத்தின் தலைவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். மேலும், பூர்வகுடி மக்களின் தினமாக அனுசரிக்கப்படும் அக்டோபர் 12-ம் தேதி கிராமி விருது வென்ற புகழ்பெற்ற ப்ளாக் ஐட் பீஸ் (Black Eyed Peas) இசை குழுவினருடன் ஆன்லைன் வாயிலாக கலந்துரையாடினார்.

இந்தப் பயணத்திற்கு இடையே பிரபல ஹாலிவுட் நடிகர் திரு.வில் ஸ்மித் மற்றும் அவரது குடும்பத்தினர் சத்குருவை சந்தித்து பேசினர். ஸ்மித்தின் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்வின் போது, அவரது குடும்பத்தினர் சத்குருவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஆன்மீகம் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் கலந்துரையாடினர். 26 நாட்களாக தொடர்ந்த இந்த மோட்டார் சைக்கிள் பயணம் சில தினங்களுக்கு முன் இனிதே நிறைவு பெற்றது.

Leave your comments here...